/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பயங்கரவாத கொடி பதுக்கிய நபருக்கு 3 நாட்கள் 'கஸ்டடி'
/
பயங்கரவாத கொடி பதுக்கிய நபருக்கு 3 நாட்கள் 'கஸ்டடி'
பயங்கரவாத கொடி பதுக்கிய நபருக்கு 3 நாட்கள் 'கஸ்டடி'
பயங்கரவாத கொடி பதுக்கிய நபருக்கு 3 நாட்கள் 'கஸ்டடி'
ADDED : ஜன 20, 2024 02:34 AM
கோவை;சிறைக்குள் பயங்கரவாத கொடி பதுக்கிய கைதியை, மூன்று நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட் அனுமதியளித்தது.
கோவை மத்திய சிறையில், விசாரணை கைதிகள் அறையில் சோதனை நடத்தப்பட்டது. என்.ஐ.ஏ., வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஈரோட்டை சேர்ந்த ஆசிப் முஸ்தகீன், பயங்கரவாத அமைப்பின் காகித கொடி பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. கொடியை பறிமுதல் செய்த போது, சிறை அலுவலர்களுக்கு மிரட்டல் விடுத்தார்.
ஆசிப் முஸ்தகீன் மீது, சட்ட விரோத செயல்கள் தடுப்பு சட்டம் (உபா) உட்பட மூன்று பிரிவின் கீழ், ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவரை 'போலீஸ் கஸ்டடி'யில் விசாரிக்க அனுமதி கோரி, கோவை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.
விசாரித்த நீதிபதி விஜயா, மூன்று நாட்கள் போலீஸ் கஸ்டடியில் விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். அதை தொடர்ந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ஆசிப் முஸ்தகீனை, விசாரணைக்கு போலீசார் அழைத்து சென்றனர்.