ADDED : நவ 20, 2024 12:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்; காரமடையை சேர்ந்தவர் முருகேஷ், 20. ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் வாடகைக்காக காரமடை சிறுமுகை சாலையில் சாஸ்திரி நகர், காந்தி சிலை அருகே சென்ற போது, ஆம்னி காரில் வந்த 3 பேர் ஆட்டோவை வழிமறித்து, முருகேஷிடம் சட்டை பாக்கெட்டில் இருந்த ரூ.1,200ஐ வழிப்பறி செய்தனர். அக்கம் பக்கத்தினர் அங்கு திரளவே, வழிப்பறி செய்த 3 பேர் தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து, காரமடை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், நெல்லித்துறை பில்லுார் பகுதியை சேர்ந்த கண்ணன், 29, திருச்சியை சேர்ந்த பாஸ்கரன், 24, காரமடையை சேர்ந்த புருஷோத்தமன், 36, உள்ளிட்டோர் ஆட்டோ டிரைவரை வழிமறித்து வழிப்பறி செய்தது தெரியவந்தது.
இதையடுத்து இவர்கள் மூவரையும் காரமடை போலீசார் கைது செய்தனர்.---

