ADDED : மே 17, 2025 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம் : தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற மூன்று பேரை பெரியநாயக்கன்பாளையம் போலீசார் கைது செய்தனர்.
பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியில் திடீர் ஆய்வு நடத்திய போலீசார், கூடலுார் கவுண்டம்பாளையம் சம்பத்குமார், 41, ஜோதிபுரம் ராஜேந்திரன், 63, பெரியநாயக்கன்பாளையம் பூமிநாதன்,30, ஆகியோர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீசார் மூவரையும் கைது செய்தனர்.

