UPDATED : நவ 08, 2026 04:29 PM
ADDED : நவ 08, 2026 04:26 PM
அ நிறம் | அளவு
கோவை: மாவட்ட கிரிக்கெட் சங்கம்(சி.டி.சி.ஏ.) சார்பில் ஒன்றாவது டிவிஷன் போட்டி ஸ்ரீ ராமகிருஷ்ணா உள்ளிட்ட மைதானங்களில் நடக்கிறது.
கோவை டஸ்கர்ஸ் அணியினர் 32 ஓவரில் 180 ரன் எடுத்தனர். கிருபாகர் 52, கவுசிகன் 38 ரன் எடுத்தனர். எதிரணியின் ஸ்ரீ ராகவ், அஸ்வின் ஆகியோர் தலா மூன்று விக்கெட் வீழ்த்தினர்.
ஸ்ரீ ராமகிருஷ்ணா கிரிக்கெட் டிரஸ்ட் அணியினர் 17.2 ஓவரில் 183 ரன் எடுத்து வெற்றி பெற்றனர். ஹரி பாண்டியா 87, மணி சங்கர் 72 ரன் எடுத்தனர்.
