/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
3 வயது குழந்தை கொலை: தாய், காதலனுக்கு 'ஆயுள்'
/
3 வயது குழந்தை கொலை: தாய், காதலனுக்கு 'ஆயுள்'
ADDED : நவ 28, 2025 11:39 PM

கோவை: மூன்று வயது குழந்தையை கொலை செய்த தாய், அவரது கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
கோவை மாவட்டம், காரமடை அருகே வெள்ளியங்காடு, பங்களா மேட்டை சேர்ந்தவர் ரூபிணி, 29. கணவனை பிரிந்த இவர், தேவிஸ்ரீ என்ற தன் மூன்று வயது குழந்தையுடன், தனியாக வசித்தார்.
அப்போது, கணபதி, லட்சுமிபுரம், சாஸ்திரி நகரை சேர்ந்த சற்குணம், 30, என்பவருடன் ரூபிணிக்கு தொடர்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனியாக சந்தித்து வந்துள்ளனர். இதற்கு குழந்தை தடையாக இருந்துள்ளது.
இருவரும் குழந்தையை கொல்ல திட்டமிட்டுள்ளனர். 2019, மே 26 இரவில், சரவணம்பட்டி, கரட்டு மேட்டில், ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு குழந்தையுடன் சென்றனர். குழந்தையின் வாயை துணியால் பொத்தி கொலை செய்து, சடலத்தை புதருக்குள் வீசி தப்பினர்.
சரவணம்பட்டி போலீசார் விசாரித்து, சற்குணம், ரூபிணியை கைது செய்தனர். கோவை மூன்றாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் வழக்கை விசாரித்த நீதிபதி பாபுலால், இருவருக்கும் ஆயுள் சிறை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

