/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
2ம் வகுப்பு மாணவிக்கு பிரம்படி: அரசு பள்ளி ஆசிரியை 'சஸ்பெண்ட்'
/
2ம் வகுப்பு மாணவிக்கு பிரம்படி: அரசு பள்ளி ஆசிரியை 'சஸ்பெண்ட்'
2ம் வகுப்பு மாணவிக்கு பிரம்படி: அரசு பள்ளி ஆசிரியை 'சஸ்பெண்ட்'
2ம் வகுப்பு மாணவிக்கு பிரம்படி: அரசு பள்ளி ஆசிரியை 'சஸ்பெண்ட்'
ADDED : நவ 28, 2025 11:40 PM
கோவை: கோவை, கருமத்தம்பட்டி அருகே எலச்சிபாளையத்தை சேர்ந்த விசைத்தறி தொழிலாளியின் 7 வயது மகள், அப்பகுதி அரசு நடுநிலைப்பள்ளியில், 2ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி வளாகத்தில் சிறுமி விளையாடிக் கொண்டிருந்தபோது, ஆசிரியை பெரியநாயகி பிரம்பால் இடது கையில் அடித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட காயத்துக்கு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. வலி தொடர்ந்ததால், கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பெற்றோர் புகாரில், சூலுார் போலீசார் ஆசிரியை மீது, 'அடித்துக் காயம் ஏற்படுத்துதல்' உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து மாவட்ட தொடக்க கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஆசிரியை மீதான புகார் உறுதியானதை தொடர்ந்து, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.