/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீட் தேர்வை சந்திக்க 30 நாள் இலவச பயிற்சி
/
நீட் தேர்வை சந்திக்க 30 நாள் இலவச பயிற்சி
ADDED : ஏப் 02, 2025 07:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; சுவாமி விவேகானந்தா சேவா கேந்திரா மற்றும் சேவா இன்டர்நேஷனல் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில், 30 நாள் நீட் இலவச பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் டாக்டர்கள், பயிற்சி வழங்கவுள்ளனர். தினந்தோறும் வகுப்புகள் எடுப்பது மட்டுமின்றி, தேர்வுகளும் நடத்தப்படவுள்ளன. மாதிரி தேர்வுகளும் நடத்தப்படவுள்ளன.
நீட் பயிற்சி தேவைப்படுபவர்கள் பங்கேற்கலாம். இரண்டாம் முறை நீட் எழுதும் மாணவர்களும் பங்கேற்கலாம். அல்லது மாதிரி தேர்வுகளில் மட்டும் பங்கேற்கலாம்.
காலை, 9:00 மணி முதல் ஒவ்வொரு நாளும் பயற்சி நடைபெறும். விபரங்களுக்கு, 63812 63424/63803 73956 ஆகிய எண்களை, தொடர்பு கொள்ளலாம்.

