/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'30 சதவீத வாக்காளர்களை உறுப்பினர்களாக சேர்க்கணும்'
/
'30 சதவீத வாக்காளர்களை உறுப்பினர்களாக சேர்க்கணும்'
'30 சதவீத வாக்காளர்களை உறுப்பினர்களாக சேர்க்கணும்'
'30 சதவீத வாக்காளர்களை உறுப்பினர்களாக சேர்க்கணும்'
ADDED : ஜூன் 09, 2025 11:24 PM
கோவை; கோவை மாநகர் மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம், மாவட்ட அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கூட்டத்தில், ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும், 30 சதவீத வாக்காளர்களை உறுப்பினர்களாக இணைக்க வேண்டும். உறுப்பினர் சேர்க்கைக்கு செல்லும் பூத் கமிட்டியினர் ஒவ்வொரு வீட்டிலும், குறைந்தது, 10 நிமிடம் செலவிட வேண்டும். இரண்டு கோடி உறுப்பினர்களை வாக்காளர்களாக ஜூலைக்குள் உறுதி செய்துவிட்டால், 2026ல் வெற்றியை தடுக்க முடியாது. நாளை கோவை வரும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, சிறப்பான வரவேற்பு வழங்க வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநகர் மாவட்டச் செயலாளர் கார்த்திக் தலைமை வகித்தார். சொத்து பாதுகாப்பு குழு துணைத் தலைவர் பழனிச்சாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.