/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புத்தகங்களுக்கு 30 சதவீதம் பொங்கல் தள்ளுபடி
/
புத்தகங்களுக்கு 30 சதவீதம் பொங்கல் தள்ளுபடி
ADDED : ஜன 06, 2025 02:06 AM
கோவை, ; பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சார்பில், டவுன்ஹாலில் உள்ள மாவட்ட நுாலக ஆணைக்குழு கட்டட வளாகம் மற்றும் நேரு ஸ்டேடியத்தில், சிறப்பு புத்தகக் கண்காட்சி நடக்கிறது.
கண்காட்சியில் தேர்வுக்கான நுால்கள், மருத்துவம், ஆன்மிகம், ஆய்வு நுால்கள், அறிவியல், சிறுவர் இலக்கியம், சுய முன்னேற்றம், அரசியல், சட்ட நுால்கள், பொது அறிவு, ஓவியம், வாழ்க்கை வரலாறு, வேளாண்மை, இலக்கியம் உள்ளிட்ட நுால்கள் விற்பனைக்கு உள்ளன.
கண்காட்சியில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, 10 முதல் 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடியும், வாசகர்களுக்கு, 10 முதல் 25 சதவீதம் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. கண்காட்சியை பயன்படுத்தி, மாணவர்கள் தங்கள் வாசிப்புத் திறனை மேம்படுத்திக் கொள்ளலாம்.
கண்காட்சி, காலை 9:00 முதல் இரவு 9:00 மணி வரை திறந்து இருக்கும்.