/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
300 கி.மீ., தூரத்துக்கு...போடுறாங்க கோடு! வனத்தீ தடுக்க ஏற்பாடு!
/
300 கி.மீ., தூரத்துக்கு...போடுறாங்க கோடு! வனத்தீ தடுக்க ஏற்பாடு!
300 கி.மீ., தூரத்துக்கு...போடுறாங்க கோடு! வனத்தீ தடுக்க ஏற்பாடு!
300 கி.மீ., தூரத்துக்கு...போடுறாங்க கோடு! வனத்தீ தடுக்க ஏற்பாடு!
UPDATED : பிப் 18, 2024 02:32 AM
ADDED : பிப் 18, 2024 12:28 AM

கோவை:கோவை வனப்பகுதியில் வறட்சியின் காரணமாக, தீ விபத்துகள் ஏற்படுவதை தடுக்க, வனத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கோவை வனக்கோட்டத்தில், வறட்சி காரணமாக கோடைக்காலத்தில், அவ்வப்போது தீ விபத்துக்கள் ஏற்படும். இதனால் வன விலங்குகள் பாதிக்கப்படுகின்றன.
இதை கருத்தில் கொண்டு, வனப்பகுதியில் காட்டுத்தீ பரவாமல் இருக்க, ஆண்டுதோறும் தீத்தடுப்புக்கோடுகளை, வனத்துறையினர் ஏற்படுத்தி வருகின்றனர்.
தீ தடுப்புக்கோடு என்பது, வனப்பகுதியில் உள்ள கழிவுகளை வெளியேற்றி சுமார், 10 மீட்டர் துார இடைவெளி விட்டு, ஒரு அடி ஆழத்தில் பள்ளம் அமைக்கப்படும். இதனால், தீ விபத்துக்கள் ஏற்பட்டாலும், அது வனப்பகுதி முழுவதும் பரவாமல் தடுக்கப்படும்.
வனத்தில் ஏற்படும் வறட்சியால், வனவிலங்குகளுக்கு உப்புச்சத்து குறைபாடு ஏற்படுவதை தடுக்க, வனவிலங்குகள் அதிகளவில் நடமாடும் பகுதிகளில், உப்புக்கட்டி வைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வனவிலங்குகளின் குடிநீர் தேவையை, பூர்த்தி செய்ய அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளில், நீர் நிரப்பும் பணியும், விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.