சமூக பிரச்னை குறித்த போட்டி 300 மாணவர்கள் பங்கேற்பு
சமூக பிரச்னை குறித்த போட்டி 300 மாணவர்கள் பங்கேற்பு
ADDED : பிப் 23, 2026 05:20 AM
கோவை: கொங்குநாடு கலை அறிவியல் கல்லுாரி மற்றும் ஈரோடு வி.இ.டி. கல்லுாரி மற்றும் சிட்டிசன்ஸ் வாய்ஸ் சார்பில், சமூக பிரச்னைகளை மையமாக வைத்து, கல்லுாரி மாணவர்களுக்கான படைப்பாற்றல் திறன் போட்டி நடந்தது. 32 அணிகளை சேர்ந்த 300 மாணவர்கள் பங்கேற்றனர்.
விபத்தில்லா எனது நகரம் போட்டியில், பொள்ளாச்சி இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி முதலிடம், திருப்பூர் ஏ.வி.பி.கலை மற்றும் அறிவியல் கல்லூரி இரண்டாமிடம், கோவை கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மூன்றாம் இடத்தை பிடித்தது.
கழிவிலிருந்து செல்வம் போட்டியில், கே.பி.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலிடம், சங்கரா அறிவியல் மற்றும் வணிக கல்லூரி, இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்தது. கோவை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் செண்பக லட்சுமி பரிசு வழங்கினார்.
நிகழ்வில், சிட்டிசன்ஸ் வாய்ஸ் தலைவர் ஜெயராமன், செயலாளர் ராஜேந்திரன், வட்டார போக்குவரத்து அலுவலர் விஸ்வநாதன், கொங்கு நாடு கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் சங்கீதா மற்றும் பலர் பேசினர்.
