ADDED : பிப் 04, 2026 05:06 AM
அன்னூர்: தமிழக அரசு அறிவித்த புதிய பென்ஷன் திட்டத்தை வாபஸ் பெற வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், பல லட்சம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். சம்பள மாறுபாடுகளை களைய வேண்டும்.
நீண்ட வருடங்களாக பணி புரியும் பல்வேறு துறை தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கம் மற்றும் ஆக்டோ ---- ஜியோ அமைப்பு சார்பில் பிப். 3ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி நேற்று வணிகவரித்துறை, வருவாய்த்துறை, அங்கன்வாடி, சத்துணவு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இச்சங்கத்தை சேர்ந்த ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
ஆக்டோ- - ஜியோ அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்கள் என 3,000 பேர் கோவை மாவட்டத்தில் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். தமிழக அரசு எங்களது கோரிக்கைகளை ஏற்கும் வரை வேலை நிறுத்தம் தொடரும்' என தெரிவித்துள்ளார்.
