/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
செம்மொழி பூங்காவில் 30 ஆயிரம் பேர் 'விசிட்'
/
செம்மொழி பூங்காவில் 30 ஆயிரம் பேர் 'விசிட்'
ADDED : டிச 29, 2025 05:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: காந்திபுரத்தில், 45 ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட்ட செம்மொழிப் பூங்கா கடந்த நவ., 25ம் தேதி திறந்துவைக்கப்பட்டது. செம்மொழி வனம், மூலிகைத் தோட்டம் உட்பட, 23 வகையான தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த, 11ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்ட நிலையில் காலை, 6:00 முதல், இரவு 7:00 மணி வரை பொது மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். வார இறுதி நாட்களில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. நேற்று மட்டும், 30 ஆயிரத்து, 156 பேர் பார் வையிட்டுள்ளனர்.

