/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேட்டுப்பாளையத்தில் 3,07,734 வாக்காளர்கள்
/
மேட்டுப்பாளையத்தில் 3,07,734 வாக்காளர்கள்
ADDED : அக் 29, 2024 09:20 PM
மேட்டுப்பாளையம்: வரைவு வாக்காளர் பட்டியலின்படி, மேட்டுப்பாளையத்தில் மொத்தம் 3 லட்சத்து 7 ஆயிரத்து 734 வாக்காளர்கள் உள்ளனர்.
கோவை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை, கலெக்டர் கிராந்திகுமார் நேற்று வெளியிட்டார். அதன் தொடர்ச்சியாக, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் ஆதார் எண் இணைத்தல், ஆகிய பணிகளை மேற்கொள்ள, நவ., 28 வரை, விண்ணப்பங்களை அந்தந்த ஓட்டுச்சாவடி மையங்களில் உள்ள நியமன அலுவலர்களிடம் வழங்கலாம்.
கோவை மாவட்டத்தில் உள்ள, 10 சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட 3,117 ஓட்டுச்சாவடி அமைந்த அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் வாக்காளர்களிடம் மனுக்களை பெற்றிட அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அரசு விடுமுறை தவிர்த்து, வேலை நாட்களில் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை விண்ணப்பங்களை நேரில் சமர்ப்பிக்கலாம்.
வரைவு வாக்காளர் பட்டியலில், மேட்டுப்பாளையத்தில் மொத்தம் 3 லட்சத்து 7 ஆயிரத்து 734 வாக்காளர்கள் உள்ளனர்.
இதில், ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 113 ஆண்கள், ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 575 பெண்கள், 46 மூன்றாம் பாலினத்தனவர்கள் உள்ளனர்.