/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உருவாகப் போகிறது புதிய பாரதம்; எழுத்தறிவு திட்டத்தில் 30,871 பேர்
/
உருவாகப் போகிறது புதிய பாரதம்; எழுத்தறிவு திட்டத்தில் 30,871 பேர்
உருவாகப் போகிறது புதிய பாரதம்; எழுத்தறிவு திட்டத்தில் 30,871 பேர்
உருவாகப் போகிறது புதிய பாரதம்; எழுத்தறிவு திட்டத்தில் 30,871 பேர்
ADDED : செப் 07, 2025 09:34 PM

கோவை; மத்திய அரசின் புதிய பாரதம் எழுத்தறிவு திட்டத்தில், நடப்பு கல்வியாண்டில், கோவையில் 30,871 பேர் கற்போர்களாக கண்டறியப்பட்டு உள்ளனர். எழுத்தறிவு இல்லாதோருக்கு அடிப்படை கல்வி வழங்கும் பணி மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
இத்திட்டத்தில், 15 வயதுக்கு மேற்பட்ட எழுத்தறிவு இல்லாதவர்களுக்கு அடிப்படை கல்வி வழங்கப்படுகிறது. கோவையில் சூலுார், பேரூர், எஸ்.எஸ்.குளம், பெரியநாயக்கன்பாளையம் உட்பட 15 வட்டார மையங்களில் 1,280 கற்றல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மையத்திலும் 20 பேர் கொண்ட குழுக்களாக பிரிக்கப்பட்டு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை அல்லது மாலை வேளைகளில் இரண்டு மணி நேர வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டு, கணக்கெடுப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், தன்னார்வலர்களுக்கு பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன.
ஜூலையில் ஏற்கனவே 7,000 பேர் தேர்ச்சி பெற்றனர். 95 சதவீத எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக கோவை இருந்தது. தற்போது பிற மாவட்டங்களிலும் மாநிலங்களிலும் இருந்து குடிபெயர்ந்து வந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும், குறிப்பாக, வால்பாறையில் அசாம் மாநில மக்களும் அதிகளவில் குடிபெயர்ந்துள்ளனர். இவர்களில் பலருக்கு எழுத்தறிவு வழங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கல்வி அதிகாரிகள் கூறுகையில், 'அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் செயல்படுகிறது. முறையாக எழுத்தறிவு பெற்றிருந்தால், குடிபெயர்ந்தவர்களுக்கு தனியாக கற்றுக்கொடுக்க வேண்டியிருக்காது. பள்ளிகளில் சேர்க்கை பெறும் மாணவர்களின் விண்ணப்பங்களில், கையொப்பம் இடாமல் கைரேகை வைத்துள்ளனரோ, அவர்களை அடையாளம் கண்டு, அடிப்படை எழுத்து பயிற்சி வழங்கப்பட உள்ளது' என்றனர்.