/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீடுகளில் திருட்டில் ஈடுபட்டவரிடம் 32 பவுன் தங்கம், பணம் பறிமுதல்
/
வீடுகளில் திருட்டில் ஈடுபட்டவரிடம் 32 பவுன் தங்கம், பணம் பறிமுதல்
வீடுகளில் திருட்டில் ஈடுபட்டவரிடம் 32 பவுன் தங்கம், பணம் பறிமுதல்
வீடுகளில் திருட்டில் ஈடுபட்டவரிடம் 32 பவுன் தங்கம், பணம் பறிமுதல்
ADDED : மே 18, 2025 12:14 AM

தொண்டாமுத்தூர்: பேரூர் சுற்றுவட்டார பகுதிகளில், பூட்டிய வீடுகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட நபரை, போலீசார் கைது செய்து, 32 பவுன் நகை மற்றும் 27 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.
கடந்த, ஏப்., 2ம் தேதி, ராமசெட்டிபாளையம், ஜுடிசியல் காலனியை சேர்ந்த உமாசங்கர் என்பவர், தனது வீட்டை பூட்டிவிட்டு, மகளின் திருமணத்திற்காக, காந்திபுரம், ராம்நகருக்கு சென்று விட்டு, ஒரு வாரம் கழித்து வீடு திரும்பினார். வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு, 9 பவுன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணம் திருடு போயிருந்தது.
உமா சங்கர் அளித்த புகாரின் பேரில், பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பேரூர் டி.எஸ்.பி., சிவக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணையில், ராமசெட்டிபாளையத்தில் தங்கியிருந்த சந்தானம்,28 என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
சந்தானத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில், ராமசெட்டிபாளையம், சுண்டக்காமுத்தூர், வேடபட்டி உள்ளிட்ட பகுதிகளில், பூட்டியிருந்த வீடுகளை நோட்டமிட்டு, இரவில் நகை மற்றும் பணத்தை திருடி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, பல்வேறு வீடுகளில் திருடிய, 32 பவுன் நகை, 878 கிராம் வெள்ளி மற்றும் 27 ஆயிரம் ரூபாய் பணத்தை, போலீசார் பறிமுதல் செய்தனர்.