/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திருட்டு போன 335 போன்கள்உரியவர்களிடம் ஒப்படைப்பு
/
திருட்டு போன 335 போன்கள்உரியவர்களிடம் ஒப்படைப்பு
ADDED : ஆக 02, 2025 11:44 PM

கோவை: கோவை மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திருட்டு போன, 335 மொபைல்கள், உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.கோவை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டில் 20 போலீஸ் ஸ்டேஷன்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த ஸ்டேஷன்கள் கட்டுப்பாட்டில் கடந்த ஜன., முதல், ஜூலை வரையிலான காலத்தில், மொபைல்போன்கள் திருட்டு, மாயமானது குறித்த புகார்கள் பெறப்பட்டன.
இப்புகார்களின் அடிப்படையில், போலீசார் நடத்திய விசாரணையில், 335 மொபைல்போன்கள் மீட்கப்பட்டன.
அதிகபட்சமாக, கோவை காட்டூர் போலீஸ் ஸ்டேஷனில், 127 மொபைல்போன்கள் மீட்கப்பட்டன.
மீட்கப்பட்ட மொபைல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி,கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் மொபைல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார்.
அவர் கூறுகையில், ''ஜன., முதல் ஜூலை வரை மீட்கப்பட்ட, 335 மொபைல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. விலை உயர்ந்த மொபைல்போன்களை கவனமாக பாதுகாக்க வேண்டும்,'' என்றார்.