sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

"குடிமகன்'களை துரத்தும் கலப்படம் :"பெப்பர்' பொடியில் மரத்தூள்

/

"குடிமகன்'களை துரத்தும் கலப்படம் :"பெப்பர்' பொடியில் மரத்தூள்

"குடிமகன்'களை துரத்தும் கலப்படம் :"பெப்பர்' பொடியில் மரத்தூள்

"குடிமகன்'களை துரத்தும் கலப்படம் :"பெப்பர்' பொடியில் மரத்தூள்


ADDED : ஜூலை 13, 2011 02:14 AM

Google News

ADDED : ஜூலை 13, 2011 02:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : குடும்பத்தாரின் கண்ணில் நைசாக மண்ணைத் தூவி, சம்பளத்தில் பெரும்பாதியை குடித்தே தீர்க்கும் 'குடிமகன்'கள், 'பெப்பர்' பொடியில் கலப்படம் அதிகரித்திருப்பதால், கலக்கம் அடைந்துள்ளனர்.

தினமும் அரசுக்கு தவறாமல் கப்பம் கட்டி கல்லாவை நிரப்பும் 'குடி'மகன்கள், முதன்மை குடிமக்களாகவும் திகழ்கின்றனர் என்பது தேசத்துக்கு இழுக்குதான். சரக்குகளின் விலை உயர்வை கூட பொருட்படுத்தாமல், வறுமையின் கோரப்பிடியிலும் சரக்கை வாங்குகின்றனர் இன்றைய குடிமகன்கள். குடித்துக் குடித்தே வயிற்றை புண்ணாக்கி கொள்ளும் இவர்களுக்கு, 'சைடு டிஷ்' ஆக தரப்படும் மிளகுத்தூளில் அதிகளவில் மரத்தூள் கலப்படம் செய்து வழங்கப்படுவதால், 'எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றினாற் போல்' கொதித்துள்ளனர். 'குடிமகன்'கள் கூறுகையில், 'டாஸ்மாக் கடைகளில், ஏற்கனவே சரக்கின் ஒரிஜினல் விலையுடன் கூடுதலாக ஐந்து ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதுதவிர, டம்ளர், தண்ணீர் பாக்கெட், சைடு டிஷ் போன்றவைக்கு மூன்று மடங்கு அதிமாகவே வசூலிக்கும் பார் உரிமையாளர்கள், மிளகுத் தூளில் கூடவா கலப்படம் செய்ய வேண்டும்? கலப்படத்தால் வயிற்றுப் புண், மதமப்பு, வயிறு உப்பல், சிறுநீர் கழிப்பதில் பிரச்னை ஏற்படுகின்றன. போதையை சாதகமாக்கி கலப்படம் செய்து பார் உரிமையாளர்கள் கலெக்ஷன் பார்ப்பது வாடிக்கையாக தொடர்கிறது' என்றனர்.






      Dinamalar
      Follow us