/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு கல்லுாரியில் 343 இடங்கள் காலி
/
அரசு கல்லுாரியில் 343 இடங்கள் காலி
ADDED : ஜூலை 07, 2025 10:37 PM
வால்பாறை; வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 343 இடங்கள் காலியாக உள்ளதால், பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், மொத்தம் உள்ள, 9 பாடப்பிரிவுகளின் கீழ், இளங்கலை முதலாமாண்டுக்கு, 520 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை தற்போது நடக்கிறது. இதில், 343 இடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில், 'ஆன்லைன்' வாயிலாக நேரடி மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது.
கல்லுாரி முதல்வர் ஜோதிமணி அறிக்கையில் கூறியிருப்பதாவது: வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், பி.ஏ., (தமிழ்) - 39, பி.ஏ., (ஆங்கிலம்) - 52, பி.பி.ஏ., - 37, பி.காம்., - 26, பி.காம்.,(சி.ஏ) - 26, பி.எஸ்சி., கணினி அறிவியல் - 40, பி.சி.ஏ., - 31, பி.எஸ்சி., தகவல் தொழில்நுட்பம் - 47, பி.எஸ்சி., கணிதம் - 56 இடங்கள் காலியாக உள்ளன.
வால்பாறை அரசு கல்லுாரியை பொறுத்த வரை, மொத்தம் உள்ள, 520 இடங்களில், 343 இடங்கள் காலியாக உள்ளன. எனவே, பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் அரசு கல்லுாரியில் சேர்ந்து பயன்பெற வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.