ADDED : ஆக 21, 2026 07:02 PM
அ நிறம் | அளவு
அன்னுார்: அன்னுார் எஸ்.ஐ., அழகேசன் தலைமையில் போலீசார், அன்னுார், சிறுமுகை சாலையில், பூலுவபாளையம், கே.கே.,நகர் மளிகை கடையில் சோதனையிட்டனர். தடை செய்யப்பட்ட 35 கிலோ குட்கா பிடிபட்டது. இவற்றை பறிமுதல் செய்து வழக்குப்பதிந்து, செல்வக்குமார் என்பவரை கைது செய்தனர்.
போலீசார் கூறுகையில், ‘தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து தெரிந்தால், தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போர் குறித்த ரகசியம் பாதுகாக்கப்படும்’ என்றனர்.
