/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கேரளாவுக்கு லாரியில் கடத்தி வந்த 3,500 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்
/
கேரளாவுக்கு லாரியில் கடத்தி வந்த 3,500 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்
கேரளாவுக்கு லாரியில் கடத்தி வந்த 3,500 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்
கேரளாவுக்கு லாரியில் கடத்தி வந்த 3,500 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்
ADDED : டிச 09, 2024 06:25 AM

பாலக்காடு, : பெங்களூரில் இருந்து கொழிஞ்சாம்பாறைக்கு, லாரியில் கடத்தி வந்த 3,500 லிட்டர் எரிச்சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்ட எஸ்.பி., ஆனந்துக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், பாலக்காடு டவுன் தெற்கு போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ஆதம்கான் தலைமையிலான போலீஸ் படையினரும், போதை தடுப்பு பிரிவினரும் ஒருங்கிணைந்தது நேற்று கொழிஞ்சாம்பாறை எலப்புள்ளி அம்புஜம் என்ற பகுதியில் சோதனை நடத்தினர்.
அப்போது அங்குள்ள, அரிசி மில்லின் அருகே காலியான இடத்தில், லாரி மற்றும் இரு கார்களுடன் நான்கு பேர் நின்று கொண்டிருந்தனர்.
சந்தேகத்தின் பேரில் லாரியை சோதனை செய்தபோது, 35 லிட்டர் கொள்ளளவு உள்ள, 100 கேன்களில், 3,500 லிட்டர் எரிசாராயம் பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்தனர். தொடர்ந்து அவர்களை கைது செய்து நடத்திய விசாரணையில், எர்ணாகுளம் பெரும்பாவூரை சேர்ந்தவர்களான வினோத், 56, விஜு, 36, பிரதீப், 47, வண்ணாமடையைச் சேர்ந்த, பினு 32 ஆகியோர் என்பதும் இதில் பினுவுக்கு சொந்தமான தென்னந்தோப்பில் உற்பத்தி செய்யும் 'கள்' மற்றும் வெளிநாட்டு மதுவில் கலப்பதற்காக எரிச்சாராயத்தை கடத்தி கொண்டு வந்துள்ளதும் தெரிந்தது. இதில் கைதான வினோத், விஜு, பிரதீப் ஆகியோர் முன்பு எரிச்சாராயம் கடத்திய வழக்கில் குற்றவாளிகள் என்பதும் விசாரணையில் தெரிந்தது.
கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி மற்றும் கார்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர் செய்த இவர்களை சிறையில் அடைத்தனர்.