ADDED : டிச 12, 2025 05:03 AM
அ நிறம் | அளவு
காந்திபுரம்: கோவை காந்திபுரத்தில் அமைந்துள்ள செம்மொழி பூங்காவை பொதுமக்கள் பார்வையிட நேற்று முதல் அனுமதிக்கப்பட்டனர்.
தினசரி காலை 6 முதல் இரவு 7 மணி வரை பார்வையிடலாம். நேற்று ஒரே நாளில் 3,600 பேர் நுழைவு கட்டணம் செலுத்தி, பூங்காவை பார்வையிட்டுள்ளனர். இதன் மூலம் மாநகராட்சிக்கு 55 ஆயிரத்து 850 ரூபாய் வருவாய் கிடைத்திருக்கிறது.
