/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
365 கிலோ குட்கா பறிமுதல்; டிரைவருக்கு சிறை
/
365 கிலோ குட்கா பறிமுதல்; டிரைவருக்கு சிறை
ADDED : நவ 09, 2024 12:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார் ; சூலுார் இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாத்துரை மற்றும் போலீசார் அவிநாசி ரோட்டில் வாகன தணிக்கை செய்தனர். முதலிபாளையம் பிரிவு அருகே வந்த கால் டாக்ஸியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள், 365 கிலோ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கார் மற்றும் குட்காவை பறிமுதல் செய்த போலீசார், கார் டிரைவரான திருப்பூர் பாண்டியன் நகரை சேர்ந்த ரமேஷ் பாண்டியனை,39 கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையில், பகலில் வாடகைக்கு கார் ஓட்டுவதும், இரவில் குட்கா பொருட்களை கடத்தி வந்ததும் தெரிந்தது.