/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடும்ப நீதிமன்றத்தில் நிலுவை... 3,750 வழக்குகள் : தேக்கம் குறைக்க அதிக கவனம்
/
குடும்ப நீதிமன்றத்தில் நிலுவை... 3,750 வழக்குகள் : தேக்கம் குறைக்க அதிக கவனம்
குடும்ப நீதிமன்றத்தில் நிலுவை... 3,750 வழக்குகள் : தேக்கம் குறைக்க அதிக கவனம்
குடும்ப நீதிமன்றத்தில் நிலுவை... 3,750 வழக்குகள் : தேக்கம் குறைக்க அதிக கவனம்
ADDED : பிப் 23, 2026 05:04 AM

கோவை:கோவை குடும்ப நீதிமன்றத்தில் 3,750 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. நீண்ட காலம் தேங்கியிருக்கும் வழக்கில் விரைந்து தீர்வு காண, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளதால், நிலுவை வழக்கு எண்ணிக்கையை குறைக்க அதிக கவனம் செலுத்தப்படுகிறது.
கோவையில் இரண்டு குடும்ப நீதிமன்றங்கள் செயல்படுகின்றன.இந்நீதிமன்றங்களில் விவாகரத்து, கணவன் அல்லது மனைவியுடன் சேர்த்து வைக்க கோருதல், குழந்தைகளுக்கு பாதுகாப்பு கோருதல், ஜீவனாம்சம் உட்பட பல்வேறு நிவாரணம் கேட்டு வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன.
நீதிமன்றத்தில் வழக்கு தாக்கலான ஆறு மாதத்துக்குள் விசாரணை முடித்து உத்தரவு பிறப்பிக்க, குடும்ப நல சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், விசாரணையை விரைந்து முடிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் ஒரு வழக்கிற்கு அதிக வாய்தா போட வேண்டியிருக்கிறது. இதனால் ஆண்டு கணக்கில் வழக்கில் இழுபறி நிலை நீடிக்கிறது.
இரண்டு கோர்ட்டில், மாதம்தோறும், 200 முதல் 250 வரையும், ஆண்டுக்கு சராசரியாக, 4,500 வரையும், புதிய வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன.
ஐகோர்ட் சுற்றறிக்கை 2025, பிப். வரை இரண்டு நீதிமன்றங்களில் 4,000 வழக்குகள் நிலுவையில் இருந்தன. வழக்குகள் தேக்கம் குறைக்கவும், நீண்ட காலம் நிலுவையிலுள்ள வழக்குகளில் விரைந்து தீர்வு காணவும், சென்னை ஐகோர்ட், அனைத்து மாவட்ட நீதித்துறைக்கு தொடர்ந்து சுற்றறிக்கை அனுப்பியது. அதனடிப்படையில் நீண்ட கால நிலுவை வழக்கை விரைந்து முடிக்க, குடும்ப நீதிமன்றங்களில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.
இந்தாண்டு, பிப். வரை கோவை முதன்மை குடும்ப நீதிமன்றத்தில், 1,900 வழக்கு, கூடுதல் குடும்ப நீதிமன்றத்தில், 1,850 வழக்கு உட்பட மொத்தம், 3,750 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.
நீண்ட கால நிலுவை குடும்ப நீதிமன்றத்தில், வழக்கு தாக்கல் செய்த நாளிலிருந்து ஓராண்டுக்குள் நிலுவையில், 1,900 வழக்கும், 2-3 ஆண்டுக்குள், 1,290 வழக்கும், 4- 5 ஆண்டுக்குள், 380 வழக்கும் நிலுவையில் இருக்கிறது. 6 ஆண்டுக்கு மேல் 10 ஆண்டுகள் வரை, 180 வழக்கு நிலுவையில் இருக்கிறது.
நீண்ட கால நிலுவை வழக்கில் விரைந்து தீர்வு காண ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளதால், வரும் ஆண்டுகளில் வழக்குகள் தேக்கம் குறைய வாய்ப்புள்ளது.

