/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
378 ஊரக குடியிருப்புக்கான குடிநீர் திட்டம்: மறு சீரமைப்பு பணிகள் துவக்கம்
/
378 ஊரக குடியிருப்புக்கான குடிநீர் திட்டம்: மறு சீரமைப்பு பணிகள் துவக்கம்
378 ஊரக குடியிருப்புக்கான குடிநீர் திட்டம்: மறு சீரமைப்பு பணிகள் துவக்கம்
378 ஊரக குடியிருப்புக்கான குடிநீர் திட்டம்: மறு சீரமைப்பு பணிகள் துவக்கம்
ADDED : நவ 20, 2025 05:32 AM

பொள்ளாச்சி: 'பொள்ளாச்சியில், 378 ஊரக குடியிருப்புகளுக்கான குடிநீர் திட்ட மறு சீரமைப்பு பணி, 51 கோடி ரூபாயில் மேற்கொள்ளும் பணிகள் துவங்கப்பட்டது.
பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, கிணத்துக்கடவு மற்றும் குடிமங்கலம் ஒன்றியங்களில் உள்ள, 295 கிராமப்புற குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இதில், குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள, 74 குடியிருப்புகளை, திருமூர்த்தி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இணைக்கப்பட்டதால் இந்த திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டது.
இதனால், கிடைக்கும் உபரிநீரை பயன்படுத்தி பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, கிணத்துக்கடவு ஒன்றியத்தில் குடிநீர் பற்றாக்குறையாக இருந்த, 157 புதிய குடியிருப்புகள் சேர்க்கப்பட்டு, தற்போது, 378 ஊரக குடியிருப்புகளுடன் பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட சமத்துார், ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சியும் சேர்க்கப்பட்டு புதிய, 378 குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டமாக மாற்றப்பட்டது.
இத்திட்டம் மறு சீரமைப்பு செய்யும் வகையில், தமிழக முதல்வர், 87 ஊராட்சிகள், மூன்று ஒன்றியங்கள், இரண்டு பேரூராட்சிகள், 378 ஊரக குடியிருப்புகள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் அறிவிக்கப்பட்டது.
இத்திட்டம் மறு சீரமைப்புக்காக, 51 கோடி ரூபாய் மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இப்பணிக்காக பூமி பூஜை நேற்று நடந்தது.பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி, தி.மு.க.,மாவட்ட செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தனர்.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், திட்டப்பணிகளை துவக்கி வைத்து பேசுகையில், ''குடிநீர் திட்ட மறுசீரமைப்பு பணிக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இப்பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு விட வேண்டும்,'' என்றார்.
நகராட்சித்தலைவர் சியாமளா, நகர பொறுப்பாளர்கள் நவநீதகிருஷ்ணன், அமுதபாரதி மற்றும் திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் பரமசிவம் பங்கேற்றனர்.
விரைவில் நடவடிக்கை அமைச்சர், நிருபர்களிடம் கூறியதாவது:
உடுமலையில் நடந்த விழாவில், பி.ஏ.பி. கால்வாய்கள் துார்வார தமிழக முதல்வர், 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்குவதாக உத்தரவிட்டார். விரைவில் நிதி ஒதுக்கப்படும். கால்வாய்கள் அமைத்து பல நாட்களாகியதால், உடைப்பு ஏற்பட்டது. அதை சரி செய்யும் பணிகள் நடைபெறுகின்றன.
கால்வாய்கள் முழுவதும் கான்கிரீட் தளமாக மாற்ற, 4,000 ரூபாய் கோடியில் மத்திய, மாநில அரசு நிதி உதவியுடன் மேற்கொள்ள அரசு முயற்சி எடுத்து வருகிறது.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

