/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆங்கில தேர்வு எழுதிய 38 ஆயிரத்து 414 பேர்
/
ஆங்கில தேர்வு எழுதிய 38 ஆயிரத்து 414 பேர்
ADDED : ஏப் 03, 2025 05:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நேற்று இடம்பெற்ற ஆங்கில மொழிப்பாடத்தை, 38 ஆயிரத்து, 414 பேர் எழுதினர்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வானது மார்ச் 28 முதல் வரும், 15ம் தேதி வரை நடக்கிறது. தமிழ் பாடத்தை அடுத்து நேற்று, ஆங்கில மொழிப் பாடத்துக்கான தேர்வு நடந்தது. கோவை மாவட்டத்தில், 518 பள்ளிகளை சேர்ந்த, 39 ஆயிரத்து, 105 மாணவர்கள், 158 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர். அவர்களில், 38 ஆயிரத்து, 414 பேர் நேற்று தேர்வு எழுதினர்; 691 பேர் எழுதவில்லை. அதேபோல், 515 தனித்தேர்வர்களில், 444 பேர் எழுதினர்; 71 பேர் வரவில்லை. ஆங்கில மொழிப்பாட தேர்வு எளிதாக இருந்ததாக, மாணவர்கள் தெரிவித்தனர்.