ADDED : மார் 15, 2024 10:22 PM
அ நிறம் | அளவு
மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் சுப்ரமணிய சாமி கோவில் அருகே சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மேட்டுப்பாளையம் போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து மேற்கொண்டனர்.
அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சலீம், 23, ஆகாஷ், 24, சையது அன்வர், 21, காஜாமைதீன், 23, ஆகிய நான்கு பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 400 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
