ADDED : மார் 29, 2026 04:35 PM
அ நிறம் | அளவு
கோவை: பெரிய கடை வீதி போலீசார், தெற்கு உக்கடம் லாரி பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். சந்தேகத்தின் பேரில் அங்கு நின்று கொண்டிருந்த நபரின் பேக்கை சோதனை செய்தனர். அதில் கஞ்சா இருந்தது. விசாரணையில் அவர், வின்சென்ட் ரோடு, பவுருதீன் எனத் தெரிந்தது. அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடமிருந்து 1200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
ஆர்.எஸ்.புரம் போலீசார், மருதமலை மெயின் ரோடு, சுகர்கேன் பகுதியில் கஞ்சா விற்ற மூவரை பிடித்தனர். விசாரணையில், அவர்கள் பி.என்.புதுார், புதுகிணறு வீதி எட்வின்குமார்,29, லாலி ரோடு, சக்திமாரியம்மன் கோவில் வீதி, பூமிநாதன்,27, அன்பு நகர் கார்த்திகேயன், 35 எனத் தெரிந்தது. மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். 500 கிராம் கஞ்ச பறிமுதல் செய்யப்பட்டது.
