/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இளநீர் கடையில் புகுந்த 4 அடி நாகபாம்பு மீட்பு
/
இளநீர் கடையில் புகுந்த 4 அடி நாகபாம்பு மீட்பு
ADDED : ஜன 03, 2025 10:21 PM
ஆனைமலை; ஆனைமலை அருகே, இளநீர் கடைக்குள் புகுந்த நான்கு அடி நீளமுள்ள நாகப்பாம்பு மீட்கப்பட்டு, வனப்பகுதியில் விடப்பட்டது.
ஆனைமலை அருகே அங்கலகுறிச்சியை சேர்ந்த முகமது அலி, 40, என்பவர், வால்பாறை ரோட்டில் இளநீர் கடை நடத்தி வருகிறார். நேற்று வழக்கம் போல கடையை திறந்து இளநீரை, விற்பனைக்காக அடுக்கி வைத்தார்.
அப்போது, இளநீரின் அடியில் இருந்து வித்தியாசமாக சப்தம் வருவதை கேட்ட முகமது அலி, சுதாரித்துக்கொண்டு இளநீரை வெளியே எடுத்து பார்த்த போது, நாகபாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து, அவர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த பாம்பு பிடிவீரர் சுரேஷ், இளநீர் குவியலில் இருந்த நான்கு அடி நீளம் உள்ள நாகபாம்பினை மீட்டு, ஆழியாறு அடர்ந்த வனப்பகுதியில் விட்டார்.

