/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கஞ்சா வேட்டையில் சிக்கிய பெண்களிடம் 4 கிலோ பறிமுதல்
/
கஞ்சா வேட்டையில் சிக்கிய பெண்களிடம் 4 கிலோ பறிமுதல்
கஞ்சா வேட்டையில் சிக்கிய பெண்களிடம் 4 கிலோ பறிமுதல்
கஞ்சா வேட்டையில் சிக்கிய பெண்களிடம் 4 கிலோ பறிமுதல்
ADDED : ஜூன் 29, 2025 12:39 AM

கோவை : மாவட்ட போலீசாரின் கஞ்சா வேட்டையில், இரண்டு பெண்கள் சிக்கினர். அவர்களிடம் இருந்து நான்கு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனையை ஒழிக்க, எஸ்.பி., கார்த்திகேயன் தலைமையில் போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, கடந்த இரண்டு வாரங்களாக கஞ்சா வேட்டை என்ற பெயரில், மாவட்டம் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது வரை, 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம், கருமத்தம்பட்டி பகுதியில் நடத்திய சோதனையில், விற்பனைக்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த, திருப்பூரை சேர்ந்த ஜெயா, 51 மற்றும் தஞ்சாவூரை சேர்ந்த துர்கா, 24 ஆகியோர் சிக்கினர்.
அவர்கள் பதுக்கி வைத்திருந்த, நான்கு கிலோ கஞ்சா நான்கு மொபைல்கள், பணம் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.