/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'4 லட்சம் டன் காகிதம் உற்பத்தி'
/
'4 லட்சம் டன் காகிதம் உற்பத்தி'
ADDED : ஜூலை 31, 2025 11:30 PM
கோவை; தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் சார்பில், மேம்படுத்திய காகிதம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் அறிமுக விழா மற்றும் வாடிக்கையாளர்கள், வினியோகஸ்தர் சந்திப்பு, கோவையிலுள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது.
செயல் இயக்குனர்கள் யோகேஷ்வர்சனே, யோகேஷ் குப்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதன்மை பொதுமேலாளர் காசிவிஸ்வநாதன் வரவேற்றார்.
விழாவில், தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் சந்தீப்சக்சேனா, பேசியதாவது: மேம்படுத்தப்பட்ட காகிதத்தை, விரைவாக நகல் எடுக்கவும் பிற பயன்பாட்டிற்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். காகிதம் தயாரிக்க, தண்ணீரின் பயன்பாட்டை குறைத்து வருகிறோம்.
அதே சமயம், காகிதம் தயாரிக்க மரங்களை அழிப்பதில்லை. இதற்காகவே மரங்கள் வளர்த்து, அவற்றின் வாயிலாகவும், கரும்பு சக்கை, பழைய காகிதங்களை பயன்படுத்தியும், புதிய காகிதங்களை தயாரிக்கிறோம்.
எங்களது நிறுவனம் ஆண்டுக்கு 4,40,000 டன் காகிதம் தயாரிக்கிறது. 2 லட்சம் டன் காகித அட்டை தயாரிக்கிறோம். இவ்வாறு, அவர் பேசினார்.
விழாவில், கோவை மாவட்ட காகிதப் பொருட்கள் விற்பனை சங்க தலைவர் வெங்கடேஷ், துணைத்தலைவர் வீனஸ்மணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.