ADDED : பிப் 19, 2025 10:11 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார் ; கல்லுாரி மாணவரிடம் நகை பறித்த வழக்கில், பெண் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
தருமபுரி மாவட்டம், நாரதம்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன், 20. கோவை திருமலையம்பாளையத்தில் தங்கி, தனியார் கல்லுாரியில் படித்து வந்தார். இவருடன் இன்ஸ்டாகிராமில் பழகிய சிவகங்கையை சேர்ந்த லாவண்யா, 23 என்ற பெண், மணிகண்டனை சூலுாருக்கு வரவழைத்து, தனது கூட்டாளிகள் கமலேஷ், 21, கிறிஸ்டோபர், 21, ராமநாதன்,20 ஆகியோருடன் சேர்ந்து, மிரட்டி, இரண்டு சவரன் நகையை பறித்து தப்பினர். இதுகுறித்து சூலுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை தேடிவந்தனர்.
இந்நிலையில், லாவண்யா உட்பட நான்கு பேரை, சிவகங்கையில் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் ஒரு நபரை தேடி வருகின்றனர்.