/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுமி, இளம்பெண் உட்பட 4 பேர் மாயம்
/
சிறுமி, இளம்பெண் உட்பட 4 பேர் மாயம்
ADDED : செப் 27, 2025 11:42 PM
சூலுார் : சூலுார் சுற்று வட்டாரத்தில், மூன்று நாட்களில், மாயமான சிறுமி, இளம்பெண் உள்ளிட்ட, நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
சூலுார் அடுத்த அப்பநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கலைவாணி; மில் தொழிலாளி. 15 வயது மகள் உள்ளார். இரு நாட்களுக்கு முன், கலைவாணி வேலைக்கு சென்று விட்டு, திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டில் இருந்த மகளை காணவில்லை.
இதேபோல், ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ஆதித்ய சோரங்க், 24. இவர் தனது மனைவி நிம்கா போக்ராவுடன் சூலுார் அடுத்த பள்ளபாளையத்தில் தங்கி, மில் வேலைக்குச் சென்று வந்தார். சம்பவத்தன்று வேலைக்குச் சென்றவர், மதியம் வீட்டுக்கு வந்தபோது, மனைவியை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், சூலுார் போலீசில் புகார் தெரிவித்தார்.
இதேபோல், பட்டணத்தைச் சேர்ந்த கட்டட தொழிலாளியான ரவி, 44, வேலைக்குச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. கண்ணம்பாளையத்தைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணகுமார், 34, வீடு திரும்பவில்லை. காணாமல் போன நான்கு பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.