/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குளோபஸ் அரிமா நிறுவன நவீன அலுவலகம் திறப்பு
/
குளோபஸ் அரிமா நிறுவன நவீன அலுவலகம் திறப்பு
ADDED : செப் 27, 2025 11:46 PM

கோவை : குளோபஸ்அரிமா பில்டர்ஸ் நிறுவனத்தின், குளோபஸ்அரிமா கிளவுட்ஸ்கேப் எனும் 'கிரேட் -ஏ' ஐ.டி., நவீன அலுவலகம், பீளமேடு விளாங்குறிச்சி சாலையில் திறக்கப்பட்டுள்ளது.
இந்த அலுவலக வளாகம், 2 லட்சத்து 93 ஆயிரம் சதுர அளவுடன், ஏழு தளங்களுடன் அமைந்துள்ளது. நவீன உட்கட்டமைப்பு, மேம்படுத்தப்பட்ட வசதிகள் இதன் தனிச்சிறப்பு.ஹோப் காலேஜ் ஐ.டி., பூங்கா பகுதியில் இருந்து 1.6 கி.மீ., தொலைவிலும், பீளமேடு ரயில் நிலையத்தில் இருந்து 2.5 கி.மீ., தொலைவிலும் அமைந்துள்ளது.
அதிநவீன வசதிகளுடன், கோவையில் தங்கள் அலுவலக கிளைகளை அமைக்க விரும்பும் நிறுவனங்கள், இவ்வளாக கிளவுட்ஸ்கேபில் வாடகை அடிப்படையில் அமைத்துக் கொள்ளலாம். நிகழ்ச்சியில், அரிமா கன்ஸ்ட்ரக்சன்ஸ் இயக்குனர் சதாசிவம், ரியா பேஷன்ஸ் இந்தியா தலைவர் ராஜன், லஷ்மி செராமிக்ஸ் நிர்வாக இயக்குனர் முத்துராமன், குளோபஸ் ரியால்டர்ஸ் நிர்வாக இயக்குனர் சிவக்குமார், அரிமா கன்ஸ்ட்ரக்சன்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் அரவிந்த்குமார், இயக்குனர் ஜெகநாதன், மஹதி இன்போடெக் நிறுவனர் கிருஷ்ணா மகாலிங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.