ADDED : பிப் 04, 2025 11:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; பொள்ளாச்சி, கண்ணப்பன் நகர் சுண்ணாம்பு கால்வாய் அருகே, தனியார் வீட்டில் வளர்க்கப்பட்ட நாய், சங்கிலியை அறுத்துக்கொண்டு ரோட்டுக்கு வந்தது.
அவ்வழியாக சென்ற முருகன், உதயகுமரன், ராதாகிருஷ்ணன், சாரதா ஆகியோரை, கடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர்கள், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். அந்த நாய் யாருடையது என்பது குறித்து, மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.