/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வழிப்பறி ஆசாமிகள் 4 பேருக்கு 'குண்டாஸ்'
/
வழிப்பறி ஆசாமிகள் 4 பேருக்கு 'குண்டாஸ்'
ADDED : நவ 14, 2025 10:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: வடவள்ளி, தில்லை நகரை சேர்ந்த மெய்யரசு,22, செட்டிபாளையம், ஜெ.ஜெ.நகர் விக்னேஷ்,21, புலியகுளம், அண்ணாநகர் முதல் வீதி லியோ ஆகாஷ்,19, அம்மன்குளம் நாக அர்ஜுன்,19, ஆகியோர், நடந்து சென்றவரை தாக்கி காயப்படுத்தி வழிப்பறி செய்த வழக்கில், கடந்த 15ம் தேதி கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால், குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க, மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.
அதன் பேரில், சிறையிலுள்ள நான்கு பேருக்கும், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகல் வழங்கப் பட்டது.

