/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காய்ச்சல் பாதிப்புக்கு 4 வயது சிறுவன் பலி
/
காய்ச்சல் பாதிப்புக்கு 4 வயது சிறுவன் பலி
ADDED : ஆக 29, 2025 01:41 AM
தொண்டாமுத்துார்; அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் கைரூள் இஸ்லாம், 32; மனைவி மற்றும் 3 மகன்கள் உள்ளனர். இவர், கலிக்கநாயக்கன்பாளையம், கீழ்சித்திரைச்சாவடி பகுதியில் உள்ள தனியார் ஷெட்டில், குடும்பத்துடன் தங்கி, வேலை செய்து வருகிறார்.
மூன்றாவது மகனான டாப்சீர், 4 வயது; மூளை வளர்ச்சி குன்றியிருந்தார். டாப்சீருக்கு, 24ம் தேதி முதல் காய்ச்சல் மற்றும் சளி அதிகமாக இருந்தது.தொண்டாமுத்துாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர் .
தொடர்ந்து, 4 நாட்களாக, காய்ச்சல் குணமாகாததால், 27ம் தேதி, ஓணாப்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். காய்ச்சல் தொடர்ந்து அதிகமாக இருந்ததால், மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு சிறுவனை கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், சிறுவன் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். தொண்டாமுத்துார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.