/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஜல்லிக்கட்டு காளை வீரர் சிலை; 'அடிசியா' நிறுவனம் சார்பில் திறப்பு
/
ஜல்லிக்கட்டு காளை வீரர் சிலை; 'அடிசியா' நிறுவனம் சார்பில் திறப்பு
ஜல்லிக்கட்டு காளை வீரர் சிலை; 'அடிசியா' நிறுவனம் சார்பில் திறப்பு
ஜல்லிக்கட்டு காளை வீரர் சிலை; 'அடிசியா' நிறுவனம் சார்பில் திறப்பு
ADDED : ஆக 29, 2025 01:41 AM

கோவை; கோவை, காளப்பட்டியின் மையப்பகுதியில் சரவணம்பட்டி, சத்தி ரோடு, வெள்ளானைப்பட்டி, சிட்ரா செல்லும் நான்கு ரோடுகள் சந்திக்கின்றன. ரவுண்டானா மட்டுமே இருந்த இந்த இடத்தில், காளப்பட்டி பகுதியை அழகுபடுத்தும் நோக்குடன், பொதுச்சேவையாக, 'அடிசியா' நிறுவனம் ஜல்லிக்கட்டு காளை வீரர் சிலையை நிறுவியுள்ளது. சிலையை கலெக்டர் பவன்குமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேற்று திறந்து வைத்தனர்.
'அடிசியா' நிர்வாக இயக்குனர் மணிகண்டன் கூறுகையில், “கோவையின் வளர்ச்சியில் 'அடிசியா' தொடர்ந்து பங்களிப்பை செய்து வருகிறது. காளப்பட்டி பகுதியை அழகுபடுத்தும் விதமாக இச்சிலை நிறுவப்பட்டுள்ளது. தொடர்ந்து இதுபோன்ற பணிகளை கோவை நகருக்கு செய்வதில் மகிழ்ச்சியடைகிறோம்,” என்றார்.