/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
40 சவரன் தங்க நகைகள், ரூ. 21 லட்சம் திருடியவர் கைது
/
40 சவரன் தங்க நகைகள், ரூ. 21 லட்சம் திருடியவர் கைது
40 சவரன் தங்க நகைகள், ரூ. 21 லட்சம் திருடியவர் கைது
40 சவரன் தங்க நகைகள், ரூ. 21 லட்சம் திருடியவர் கைது
ADDED : ஜூன் 06, 2025 06:12 AM
போத்தனூர்; கோவை, குனியமுத்தூரிலுள்ள அரசு பணியாளர் காலனியை சேர்ந்தவர் செல்லதுரை; சென்னையில் விடுதி நடத்தி வருகிறார். குடும்பத்தினர் குனியமுத்தூரில் வசிக்கின்றனர்.
இவரது வீட்டில் அடிக்கடி பணம், நகை திருட்டு போனது. அதுபோலவே சென்னையிலும். இதுவரை, 40 சவரன் தங்க நகைகள், 21 லட்சம் ரொக்கம் திருட்டு போனது தெரிந்தது.
இதையடுத்து, செல்லதுரை குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். விசாரித்த போலீசார் செல்லதுரை வீடு, விடுதியில் பேப்ரிகேஷன் வேலை பார்த்த சென்னை, வில்லிவாக்கத்தை சேர்ந்த சுரேஷ், 33 என்பவரை கைது செய்தனர்.
விசாரணையில், கடந்த இரண்டாண்டுகளாக, செல்ல துரையிடம் வேலைபார்த்த சுரேஷ், அவரது வீடுகளிலேயே திருடி வந்தது தெரிந்தது. நகை, ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.