/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
400 மீ., தொடர் ஓட்டத்தில் முதலிடம்; கோவை வன ஊழியர் அசத்தல்
/
400 மீ., தொடர் ஓட்டத்தில் முதலிடம்; கோவை வன ஊழியர் அசத்தல்
400 மீ., தொடர் ஓட்டத்தில் முதலிடம்; கோவை வன ஊழியர் அசத்தல்
400 மீ., தொடர் ஓட்டத்தில் முதலிடம்; கோவை வன ஊழியர் அசத்தல்
ADDED : செப் 19, 2024 11:06 PM

கோவை: வனத்துறை ஊழியர்களுக்கான, 400 மீ., தொடர் ஓட்டத்தில் கோவை மண்டலம் முதல் பரிசை தட்டியுள்ளது.
கோவை வனக்கல்லுாரி மைதானத்தில், 27-வது மாநில வனத்துறை ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நேற்று துவங்கின; இன்று நிறைவடைகிறது. இதில், கோவை, மதுரை, விருதுநகர், சென்னை, திருச்சி, திருநெல்வேலி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், வேலுார், தஞ்சாவூர், தர்மபுரி, விழுப்புரம் என, 13 மண்டலங்களை சேர்ந்த, 652 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில், வாலிபால், கபடி, கிரிக்கெட், கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, செஸ், கேரம், இறகு பந்து, டென்னிஸ் உள்ளிட்ட போட்டிகள் நடக்கின்றன.
துவக்க விழாவில், அகில இந்திய கபடி போட்டியில் தங்கம் வென்ற கோவை அணி மற்றும் அகில இந்திய, மாநில அளவிலான வனத்துறை விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு கோப்பை, பதக்கம் வழங்கப்பட்டது.
நேற்றைய துவக்கத்தில், 13 மண்டல வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், முதல் பரிசை சேலம் மண்டலமும், இரண்டாம் பரிசை கோவை மண்டலமும், மூன்றாம் பரிசை திருச்சி மண்டலமும் பெற்றது. 400 மீ., தொடர் ஓட்டத்தில், கோவை மண்டல வீரர்கள் முதல் பரிசை தட்டிச்சென்றனர். இரண்டாம் பரிசை திருச்சி மண்டலம் பெற்றது. தொடர்ந்து, போட்டிகள் நடந்து வருகின்றன.