/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரங்கநாதர் கோவிலில் நாளை 400வது வார பக்தி சொற்பொழிவு
/
அரங்கநாதர் கோவிலில் நாளை 400வது வார பக்தி சொற்பொழிவு
அரங்கநாதர் கோவிலில் நாளை 400வது வார பக்தி சொற்பொழிவு
அரங்கநாதர் கோவிலில் நாளை 400வது வார பக்தி சொற்பொழிவு
ADDED : ஆக 07, 2025 09:51 PM
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், நாளை (9ம் தேதி), 400 வது வார பக்தி சொற்பொழிவு நடைபெற உள்ளது.
காரமடையில், எஸ்.வி.டி., பசுமை அறக்கட்டளை சார்பில் ஒவ்வொரு வாரம் சனிக்கிழமை, காரமடை அரங்கநாதர் கோவிலில் பக்தி சொற்பொழிவை நடத்தி வருகிறது.
இளைஞர், இளம் பெண்கள் மத்தியில் ஆன்மீகத்தை வளர்க்கும் வகையில், சிறந்த ஆன்மீக சொற்பொழிவாளர்களை அழைத்து வந்து, அறக்கட்டளை அமைப்பினர் பக்தி சொற்பொழிவை நடத்தி வருகின்றனர்.
நாளை (9ம் தேதி) மாலை, 5:00 மணிக்கு, வாரம் ஒரு பக்தி சொற்பொழிவின், 400 வது வார நிகழ்ச்சி நடைபெற உள்ளது. கும்பகோணத்தை சேர்ந்த வேங்கடேஷ், ராமானுஜரும், ஆளவந்தாரும் என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்த உள்ளார். முன்னதாக மதியம், 3:00 மணியிலிருந்து, 5 மணி வரை சிறுமுகை வெள்ளிக்குப்பம்பாளையம் வேணுகாண கலை குழுவினரின் கும்மியாட்ட கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் காரமடை அரங்கநாதர் கோவில் அறங்காவலர்கள், ஸ்தலத்தார்கள், செந்தில் குரூப் சேர்மன், கோவில் செயல் அலுவலர், அறக்கட்டளை நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை எஸ்.வி.டி. நிறுவனர் சக்திவேல் செய்து வருகிறார்.