/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு 40,644 பேர் எழுதுகின்றனர்
/
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு 40,644 பேர் எழுதுகின்றனர்
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு 40,644 பேர் எழுதுகின்றனர்
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு 40,644 பேர் எழுதுகின்றனர்
ADDED : மார் 27, 2025 11:54 PM
கோவை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று துவங்கும் நிலையில் கோவை மாவட்டத்தில், 40 ஆயிரத்து, 644 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
மாநிலம் முழுவதும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு இன்று துவங்கி ஏப்., 15ம் தேதி வரை நடக்கிறது. கோவை மாவட்டத்தை பொறுத்தவரை, 518 பள்ளிகளை சேர்ந்த, 39 ஆயிரத்து, 433 மாணவர்கள், 157 மையங்களில் இத்தேர்வு எழுதுகின்றனர்.
தவிர, பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தை சேர்ந்த, 228 பேரும், கோவை கல்வி மாவட்டத்தை சேர்ந்த, 983 பேரும் என, 1,211 பேர், 10 மையங்களில் தனித்தேர்வர்களாக எழுதுகின்றனர். தேர்வு பணியில், முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், பறக்கும் படையினர், அறை கண்காணிப்பாளர்கள் உட்பட, 3,500க்கும் மேற்பட்டோர் ஈடுபடுவதாக மாவட்ட கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.