/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
லாரி, ஆட்டோவுடன் 43 கிலோ குட்கா பறிமுதல்
/
லாரி, ஆட்டோவுடன் 43 கிலோ குட்கா பறிமுதல்
ADDED : அக் 23, 2024 05:29 AM
அன்னூர் : அன்னூர் அருகே, 43 கிலோ குட்காவும், கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி மற்றும் சரக்கு ஆட்டோவும், பறிமுதல் செய்யப்பட்டன.
அன்னூர் போலீஸ் எஸ்.ஐ., குமார் தலைமையிலான தனிப்படையினர், நேற்று காலை பசூர், பெட்ரோல் பங்க் அருகே சோதனை நடத்தினர்.
இதில் பொங்கலூரைச் சேர்ந்த தியாகராஜன், 54. ஆயிமாபுதூரைச் சேர்ந்த விஸ்வநாதன், 48. கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகரை சேர்ந்த மன்சூர், 36. ஆகிய மூவர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து ஹான்ஸ், கூல் லிப், ஸ்வாகத், விமல் உள்ளிட்ட 43 கிலோ குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
கர்நாடக மாநிலத்தில் இருந்து, குட்கா கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு ஆட்டோ மற்றும் லாரி கைப்பற்றப்பட்டது. மூவரும் அன்னூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

