/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆவணங்கள் இல்லாத 4.3 லட்சம் ரூபாய் பறிமுதல்
/
ஆவணங்கள் இல்லாத 4.3 லட்சம் ரூபாய் பறிமுதல்
ADDED : மார் 20, 2024 12:33 AM
போத்தனூர்;மதுக்கரை சுற்றுப்பகுதியில், ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட, ரூ.4.3 லட்சம் ரொக்கம், மூவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
மதுக்கரை பைபாஸ் சாலையில் நேற்று முன் தினம், துணை பி.டி.ஓ., கவுசல்யா தலைமையிலான குழுவினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அவ்வழியே வந்த மினி சரக்கு வாகனத்தை நிறுத்தி விசாரித்தனர்.
வாகனம் ஓட்டி வந்தது கேரள மாநிலம், திருச்சூரை சேர்ந்த குலன்திங்கல் கோயான்னி ஹஸனார், 59 என்பதும், ஆவணங்களின்றி, ரூ.1.49 லட்சம் ரொக்கம் இருப்பதும் தெரிந்தது. ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
பாலத்துறை சந்திப்பில், கிணத்துக்கடவு பி.டி.ஓ., சதீஷ் தலைமையிலான குழுவினர், அவ்வழியே வந்த மினி லாரியை நிறுத்தி விசாரித்தனர்.
திருச்சூரை சேர்ந்த லாரன்ஸ், 53 என்பதும், ஆவணங்களின்றி, 1.81 லட்சத்து, 500 ரூபாய் ரொக்கம் இருப்பதும் தெரிந்தது. ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
அதுபோல், அவ்வழியே வந்த டிப்பர் லாரியை நிறுத்தி விசாரித்தனர்.
ஓட்டுனர், எர்ணாகுளத்தை சேர்ந்த பிரவீன், 39 என்பதும், அவரிடம் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் இருப்பதும் தெரிந்தது. ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

