/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இனிப்பு கடைகளில் ஆய்வு 43 மாதிரிகள் அனுப்பிவைப்பு
/
இனிப்பு கடைகளில் ஆய்வு 43 மாதிரிகள் அனுப்பிவைப்பு
ADDED : அக் 06, 2025 12:07 AM
கோவை; கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில், தீபாவளி பண்டிகை முன்னிட்டு இனிப்பு கடைகளில் ஆய்வு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இனிப்புகளில் செயற்கை நிறமிகள் கலப்பது, மூலப்பொருட்களின் தரம், தயாரிப்பு இடங்களின் சுகாதாரம் அனைத்தும் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதுகுறித்து, மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதா கூறுகையில், '' தீபாவளி நேரம் என்பதால், மக்கள் அதிக அளவில் இனிப்புகளை வாங்குவது வழக்கம். 'பளிச்' என கண்ணை பறிக்கும் வண்ணங்களில் இருக்கும் இனிப்புகளை தவிர்ப்பது நல்லது. இனிப்பு, கேக் கடைகள், பேக்கரிகளில் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. தற்போது, 382 கடைகளில் ஆய்வு மேற்கொண்டு, 43 மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம். பண்டிகைக்கு மட்டும் கடை போட்டாலும் உணவு பாதுகாப்பு தர விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்கவேண்டும், '' என்றார்.