/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திருக்குறள் பேச்சு போட்டியில் மாநில அளவில் மூன்றாம் இடம்
/
திருக்குறள் பேச்சு போட்டியில் மாநில அளவில் மூன்றாம் இடம்
திருக்குறள் பேச்சு போட்டியில் மாநில அளவில் மூன்றாம் இடம்
திருக்குறள் பேச்சு போட்டியில் மாநில அளவில் மூன்றாம் இடம்
ADDED : அக் 06, 2025 12:08 AM

கோவை; மாநில அளவிலான திருக்குறள் பேச்சுப் போட்டியில், கோவை மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவன் ஸ்ரீதேவ் மூன்றாம் இடம் பெற்றுள்ளார்.
மாவட்டத்தில் ஸ்ரீராம் இலக்கியக் கழகம் சார்பில், சபர்பன் மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஆகஸ்ட் மாதம் 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மண்டல அளவிலான பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாநில அளவிலான இறுதிப் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அதன்படி, மாநில அளவிலான இறுதிப்போட்டி சமீபத்தில் சென்னையில் 'குறளுக்கும் அமுதென்று பேர்' என்ற தலைப்பில் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் இருந்து, 12 மண்டல மையங்களில் தேர்வான 12 மாணவர்கள் இதில் பங்கேற்றனர்.
அவற்றில், கோவை மண்டலத்தில் முதலிடம் பெற்று தேர்வான மூலத்துறை அரசு பள்ளி மாணவன் ஸ்ரீதேவ் 'உடம்போடு உயிரிடை நட்பு' என்ற தலைப்பில் பேசி, மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்தார். மாணவனுக்கு ரூ.7,500 ஊக்கப் பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டது.