சட்டவிரோதமாக பதுக்கிய 430 மதுபாட்டில்கள் பறிமுதல்
சட்டவிரோதமாக பதுக்கிய 430 மதுபாட்டில்கள் பறிமுதல்
ADDED : ஆக 26, 2026 05:10 PM
அ நிறம் | அளவு
ஆனைமலை: ஆனைமலை பகுதியில், சட்டவிரோதமாக விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த, 430 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்து, இருவரை போலீசார் கைது செய்தனர்.
மிலாடி நபியை முன்னிட்டு தமிழகம் முழுவதும், அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து, சட்டவிரோதமாக மது விற்பனை நடக்கிறதா என்பதை கண்காணிக்க, ஆனைமலை போலீசார் ரோந்து சென்றனர்.
ஒடையகுளம் கருப்பராயன் கோவில் வீதியில் உள்ள புதரில் மறைத்து வைத்து அதிக விலைக்கு மது விற்பனை செய்து கொண்டிருந்த கோபாலை என்பவரை போலீசார் கைது செய்து, 290 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதுபோன்று, சரளப்பதி அருகே கால்வாய் மேட்டில் மது விற்பனையில் ஈடுபட்ட சரண்யாவை கைது செய்த போலீசார், 140 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
