தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ உண்டு உறைவிட பள்ளியில் மாயமான மாணவர்கள் மீட்பு

உண்டு உறைவிட பள்ளியில் மாயமான மாணவர்கள் மீட்பு

உண்டு உறைவிட பள்ளியில் மாயமான மாணவர்கள் மீட்பு


ADDED : ஆக 26, 2026 05:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 26, 2026 05:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆனைமலை: ஆனைமலை அருகே டாப்சிலிப் பகுதியில் மாயமான மாணவர்கள் மீட்கப்பட்ட நிலையில், போலீசார், வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.

 ஆனைமலை அருகே டாப்சிலிப் பகுதியில் உள்ள உண்டு உறைவிட அரசு நடுநிலைப்பள்ளியில், ஏழாம் வகுப்பு பயிலும் பழங்குடியின குடியிருப்பை சேர்ந்த மாணவர்கள் நேற்று முன்தினம் காணவில்லை. பள்ளியில் மாணவர்கள் இல்லாததால், ஆசிரியர்கள் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.

இது குறித்து, பள்ளி நிர்வாகத்தினர், ஆனைமலை போலீசாரிடம் புகார் கொடுத்தனர். இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு, வனத்தில் இருந்து வெளியே வந்த மூன்று மாணவர்கடைளயும், அவ்வழியாக சென்ற பொதுமக்கள் மீட்டு, வேட்டைக்காரன்புதுார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.

அதில், ஒரு சிறுவன் ஓடி வரும் போது காயமடைந்ததால் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டது தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் விசாரணை செய்ததில், வீட்டுக்கு செல்வதாக கூறி ஒரு மாணவர், சக மாணவர்களை அழைத்துச் சென்றது தெரியவந்தது. சிகிச்சை அளிக்கப்பட்ட பின், மூவரையும் வனத்துறையினருடம் போலீசார் அனுப்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us