/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆதிபராசக்தி கோவிலில் 43ம் ஆண்டு விழா
/
ஆதிபராசக்தி கோவிலில் 43ம் ஆண்டு விழா
ADDED : அக் 07, 2025 09:05 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு ஆதிபராசக்தி கோவிலில் வரும், 11 மற்றும் 12ம் தேதிகளில் 43ம் ஆண்டு விழா நடக்கிறது.
கிணத்துக்கடவு ஆதிபராசக்தி கோவிலில், கலச விளக்கு வேள்வி பூஜை, கஞ்சிக்கலய விழா மற்றும் 43ம் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதில், 10ம் தேதி காலை 6:00 மணிக்கு, கொடி ஏற்றுதல் நடக்கிறது. 11ம் தேதி, மாலை 5:00 மணிக்கு, குரு பூஜை விழா நடக்கிறது.
வரும், 12ம் தேதி, காலை 5:00 மணிக்கு, கலச விளக்கு வேள்வி பூஜை, காலை 10:00 மணிக்கு பிளேக் மாரியம்மன் கோவிலில் இருந்து கஞ்சிகலயம் எடுத்து வரப்படுகிறது.
தொடர்ந்து காலை 11:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.