/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
45 - 50 பஸ்கள் நிறுத்தும் வசதியுடன் அசத்தப்போகுது ஆம்னி பஸ் ஸ்டாண்ட்!
/
45 - 50 பஸ்கள் நிறுத்தும் வசதியுடன் அசத்தப்போகுது ஆம்னி பஸ் ஸ்டாண்ட்!
45 - 50 பஸ்கள் நிறுத்தும் வசதியுடன் அசத்தப்போகுது ஆம்னி பஸ் ஸ்டாண்ட்!
45 - 50 பஸ்கள் நிறுத்தும் வசதியுடன் அசத்தப்போகுது ஆம்னி பஸ் ஸ்டாண்ட்!
ADDED : ஜூன் 12, 2024 11:38 PM

கோவை : கூடுதல் வசதிகளுடன் விரைவில், ஆம்னி பஸ் ஸ்டாண்ட் செயல்பாட்டுக்கு வரவுள்ளது.
கோவை காந்திபுரம் ஆம்னி பஸ் ஸ்டாண்டு, 1.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது. பஸ்கள் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக, இடநெருக்கடியை சந்தித்து வருகிறது.
பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில், ரோடு குண்டும், குழியுமாக இருப்பதுடன், பயணிகளை இறக்கி விட வரும் வாகனங்கள் கூட, உள்ளே செல்ல முடியாத நிலை உள்ளது.
இதனால் ஆம்னி பஸ் ஸ்டாண்டை வேறு இடத்துக்கு மாற்ற, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கழிப்பறை, நடைபாதை, தங்கும் அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள், ரூ.2.90 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்வதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளை, கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆய்வு செய்தார்.
அவர் கூறுகையில், ''புதிதாக கட்டப்படும் ஆம்னி பஸ் ஸ்டாண்ட்டில், கழிப்பறை, நடைபாதை, மேற்கூரை, தங்கும் அறை, தாய்ப்பால் ஊட்டும் அறை என, பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. ரோடு சீரமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பஸ் ஸ்டாண்டில், 45 - 50 பஸ்கள் நிற்க வசதி ஏற்படுத்தப்படும். பயணிகளை ஏற்றி, இறக்கி விட தேவையான வசதிகளும் ஏற்படுத்தப்படும். விரைவில் பஸ் ஸ்டாண்ட் செயல்பாட்டுக்கு வரும்,'' என்றார்.

